31. தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசி பிற்காலப்
பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கியது. தென்காசி
நகரில் புகழ்மிக்க காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.
காசி விஸ்வநாதர் கோவில் தென்காசியைத் தலைநகராகக்
கொண்டு ஆட்சிபுரிந்த பராக்கிரம பாண்டியன் (1422-1463)
என்ற மன்னரால் கட்டப்பட்டதாகும். கோவிலின்
வழிபாட்டிற்காக இம்மன்னர் பல ஊர்களைத் தானமாகக்
கொடுத்தார். இக்கோவிலைப் பாதுகாத்து வருமாறு
சிவனடியார்களுக்கும், அவர்கள் வழித்தோன்றல்களுக்கும்
பணித்து, அப்பணியை இம்மன்னனே செய்யுளில் பாடி,
இக்கோவில் கோபுரத்தில் இன்றும் எல்லோரும் காணும்படிப்
பொறித்தார்.
கருவறையில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
இறைவி உலகம்மன் எனப்படுகிறார். இங்குள்ள துணை
ஆலயங்களில் பாலமுருகன் சந்நிதி முக்கியமானதாகும்.
இறைவன் சந்நிதியின் வாயிலருகில் உள்ள
திருஓலக்க
மண்டபத்தில் தமிழ்நாட்டிலுள்ள சிற்ப அதிசயங்கள்
சிலவற்றைக் காணலாம். இம்மண்டபத்தில் பின்வரும் 10
வியத்தகு சிலைகள் உள்ளன :
1. அக்னி வீரபத்திரர்
2. ரதிதேவி
3. மகா தாண்டவம்
4. ஊர்த்துவ தாண்டவம்
5. காளிதேவி
|